அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது – விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்

Default Image

படலாசியர் கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்.

பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்பின் தூரிகையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகம் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மக்கள்கவி கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், செப்-16 அன்று அவரது #BEING_WOMEN இதழின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும்படி அலைபேசிவழி எனக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தையைப்போல பெரும்புகழுடன் பெருமகிழ்வுடன் வாழவேண்டிய இளநங்கைக்கு வீரவணக்கம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்