தேவர் ஜெயந்தி: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை.!
தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
அப்பொழுது, மூத்த அமைச்சர்கள், திமுக நிருவாகிகள் பங்கேற்று மரியாதையை செலுத்தினர். கடந்த முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்த சென்ற நிலையில், இந்த முறை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே, மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், தெப்பகுளம் அருகில் அமைந்துள்ள மருது சகோதர்களின் திருவுருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், டி. ஆர். பி. ராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்திருந்தனர். முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை ஒட்டி 10,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025