சென்னை :தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும், பொதுமக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தந்தையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாயரான துர்கா ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனை தொடர்ந்து,சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்வர்உதயநிதிமரியாதை செலுத்தினார். தற்பொழுது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி X தள பதிவு
“உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டேன். எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node