துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அன்பு பரிசு! என்ன தெரியுமா?

முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பை நினைவுப் பரிசாக அமைச்சர் எ.வ.வேலு வழங்கியுள்ளார்.

E. V. Velu udhayanidhi stalin

திருவண்ணாமலை :இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் எ.வ.வேலுவும் உடன் இருந்தார். பரிசு வழங்கிவிட்டு பரிசு வாங்கியவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதன்பிறகு , விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷயம் ஒன்றையும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ” தமிழ்நாட்டில் தான் விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளோம். விரைவில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி வாக்குறுதி கொடுத்தது வீரர்களின் மனதில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சி முடித்த பிறகு உதயநிதிக்கு அமைச்சர் எ.வ.வேலு மறக்க முடியாத அளவுக்கு அசத்தலான பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அது என்ன பரிசு என்றால், முழுக்க முழுக்க வெள்ளியில் செய்யப்பட்ட பேட் மற்றும் ஸ்டெம்பை தான் பரிசாக வழங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்பதற்கு முன்பு விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். எனவே, அமைச்சர் எ.வ.வேலு இப்போது அது சம்பந்தமாக மறக்க முடியாத வகையில் பரிசு கொடுத்துள்ளதால் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசாக வைத்து கொள்ளவார் எனக் கூறப்படுகிறது.

unknown node

udhayanidhi stalin velu [file image]