டிட்வா புயல் எதிரொலி : புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை!

ஏற்கனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

Pudukkottai School Leave

புதுக்கோட்டை :டிட்வா (Ditwah) புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (28.11.2025) பிற்பகலுக்குப் பின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை வழக்கமான நேரத்தில் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் நிலையில், ஆனால் மதிய உணவுக்குப் பிறகு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, புயல் நெருங்குவதால் மாலை முதல் இரவு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ள அபாயம் மற்றும் போக்குவரத்து சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பெற்றோர்கள் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும், தேவைப்பட்டால் பள்ளி வாகனங்கள் முன்கூட்டியே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.