திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் […]
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு வலுவான ஆதரவு அமெரிக்காவில் இருந்து வருகிறது. அமெரிக்காவையும் தாண்டி 13,000 கி.மீ தொலைவில் இருக்கும் திருவாரூரில் அமைந்துள்ள துளசேந்திரபுரம் எனும் கிராமம் வரை ஆதரவு பெருகி இருக்கிறது. சிறப்புப் பூஜை : அதற்கு, சான்றாக துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் இன்று […]
திருவாரூர் : மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சதீஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்குமன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை […]
வெடிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துகுலனத்தில் அந்த பகுதி சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட குடவாசல் சாலையில், அருகருகே 50க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், கடையில் […]
அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு. கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என இழப்பீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. […]
அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவுக்கு கொண்டு வர நெற்பயிரை சாலைகளில் கொட்டி காயவைத்துள்ளார் திருவாரூர் பகுதி விவசாயிகள். ஆனால், திடீரென்று பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அறுவடை செய்த நேரத்தில் மழை பெய்து வரும் காரணத்தால் அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத அதிகபட்ச ஈரப்பத அளவுக்கு […]
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி […]
திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த […]
இன்று முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக […]
முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு […]
திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக அடுத்த மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக முத்து காலிங்கன் கிருஷ்ணன் நியமனம். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்த முத்து காலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது […]
திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மகப்பேறு […]
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவாரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு இன்று செல்கிறார். அதன்படி, மதியம் சாலை வழியாக திருவாரூர் சென்று, மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். பின் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்துகிறார். பயணத்தை முடித்து விட்டு நாளை […]
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூரில் உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு செல்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்று,தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை செல்கிறார்.ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்யவுள்ளார். திருக்குவளையில் தந்தை கருணாநிதி வாழ்ந்த இல்லம், தாத்தா, பாட்டி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற ஒரு மாதங்களை கடந்துள்ள நிலையில், அவர், இந்த ஒருமாதத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், வரும் 12-ம் தேதி திருவாரூர் […]
திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதுதொடர்பாக,முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும்,விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை […]