ஊரடங்கு மீறல் – ரூ.2.68 கோடி அபராதம் வசூல்.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் வெளியே சுற்றிய 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2.68 கோடி  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala