துடைப்பம் எங்ககிட்ட தான் இருக்கு..! பிரதமர் மோடி விமர்சனத்துக்கு பதிலடி

CPI Mutharasan : திமுக - காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

Featured image

CPI Mutharasan : திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டின் வருகை தந்த போது பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பேசுகையில், ”மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

Read More –மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு

இதற்கு பதிலளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறிய பிரதமருக்கு துடைப்பம் தேவை, ஆனால் அந்த துடைப்பமே (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் கூட்டணியில் தான் உள்ளது.

Read More –எம்மாடியோ….வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை.!

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு யுத்தமாகும். மோடியின் ஆட்சி அகற்றப்பட்டால் தான் நாடு காப்பாற்றப்படும். அவரது தலையிலான பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற நாம் பாடுபட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை” என கூறினார்.