சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை விமர்சனம் செய்யும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்தனர். குறிப்பாக பெரும்பாலானோர் பாஜகவை […]
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். திருவள்ளுவர், கவிஞர் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் பற்றி இந்த கருத்தரங்கில் பலர் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழிலில் தான், சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது. விழாவுக்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு முனிவர் போன்று காவி உடை அணிவிட்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு பலர் விமர்சனம் செய்து […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி […]
சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தர மறுத்து வருகிறது. அதனால், தொடர் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்த காரணத்தால், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக […]
CPI Mutharasan : திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டின் வருகை தந்த போது பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பேசுகையில், ”மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்” என கடுமையாக விமர்சித்திருந்தார். Read More – மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு இதற்கு […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் பெட்ரோலியம் நிறுவனமான சிபிசிஎல் (CPCL) நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவு, வெள்ளத்தில பக்கிங் கால்வாய் வழியாக, கொசஸ்தலை […]
2019, 2021 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டவர் உதயநிதி. அமைச்சர் பதவியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இன்று தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகந்துள்ளது. முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் கண்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு […]
சாதிச்சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்த வேல்முருகன் இறப்புக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்து இருந்துள்ளார். இவர் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி, […]
நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது – இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன். சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட […]
சனாதனம் கருத்து குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎஸ்இ-ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன கருத்தை நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடைபெறும். இந்த பாடத்தில் உயர்சாதி, கீழ் சாதி என வரிசையிட்டு படம் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மத்திய அரசு இந்த பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பில் சேர்த்திருப்பது […]
21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார். சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார். அதில், தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ். ஏழுமலை (வார்டு 193), எம். ரேணுகா (வார்டு […]
நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனி சின்னத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனி சின்னத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். நாங்கள் கேட்பது மற்றும் கூட்டணி ஒதுக்கும் தொகுதிகள் பற்றி கலந்தாலோசித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில தேசிய கட்சிகளின் விருப்பம். ரஜினியின் ஆரோக்கியத்தையும், அவர் நடிக்க வேண்டும் என்பதையே ரசிகர்களும், மக்களும் விரும்புகின்றனர் […]
பொங்கல் பரிசின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முதல்வரின் முயற்சி பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் அவர்கள் நேற்று தஞ்சையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிரதமரும் முதல்வரும் மௌனம் காப்பது கண்டனத்துக்கு உரியது எனவும், பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் பாஜக ஆணவத்துடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை எனவும் […]
திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் எனவும், மு.க ஸ்டாலின் தான் முதல்வராவார் எனவும் இந்திய கமியூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் எனுமிடத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் உயிலுமுத்து அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, அவர் கொள்கை சார்ந்த கூட்டணி தான் […]