CPI Mutharasan : திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டின் வருகை தந்த போது பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பேசுகையில், ”மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்” என கடுமையாக விமர்சித்திருந்தார். Read More – மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு இதற்கு […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியரும்,தோழர் என்ஆர் என அழைக்கப்பட்ட என்.ராமகிருஷ்ணன் அவர்கள் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா அவர்களின் சகோதரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று இரவு மதுரையில் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 82 வயதான என்.ராமகிருஷ்ணன் அவர்கள்,தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25-க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் என வாழும் பல்கலைக்கழகமாகவே […]
தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் குடுக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் பொது இதனை அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் அதனை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட்கள் மார்சிஸ்ட் […]
இன்று திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர். […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் , தலைவர்கள் பேச்சு : மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் , DYFI-யின் […]
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தீர்பளித்தது.இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் எற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சரை சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை […]
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக முன் வந்துள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு சான்றிதழும் தந்தை பெயராக டி.ஜெயக்குமார் என்பதை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது. உதவி கேட்டு சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அப்பெண் கருவுற்று குழந்தை பெற்றதாகவும், இதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இது அவதூறு என அமைச்சர் கூறினாலும் வெகுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை இது எழுப்புகிறது. நாடு முழுவதும் அரசியல் […]
“55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடலில் இரண்டு மண்டலங்கள், பூமியில் ஒரு மண்டலம் என ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடங்கள் வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தமாகி உள்ளது. தரை மண்டலத்தை பொறுத்தவரை குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரையிலான மண்டலம் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி பாசன மண்டலத்தை பசுமை மண்டலமாக பராமரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் எடுக்க […]
கன்னியாகுமரி மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.அதில் , கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்கத்தினர் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக […]
டெல்டா மாவட்டங்களுக்கு பேராபத்து : ஒருங்கிணைந்து போராட சிபிஎம் அறைகூவல்…! சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கொல்லைப்புற வழியாக எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்திருப்பது மிகப்பெரும் ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித் துள்ளது. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்திட அனைத்துப் பகுதி மக்களும் ஒருங்கிணைந்து போராட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஆழமற்ற கடல் பகுதிகளிலும் கரைப்பகுதி யிலும் கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட […]
நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, பல்வேறு காட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதில் நெல்லை மாவட்டம் முழுவதும் 800 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மதநல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் ராமராஜ்ஜிய ரத […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை சாலை மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. அனைத்து கட்சி கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு பற்றி விவாதிக்கபட்டது. நாளை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளதென அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக சிபிஐ(எம்) […]
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
E.v.k.s.இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பல அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர்.அப்போது உரை நிகழ்த்திய “காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் தவறானது” காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் ஏழைகளை மிகவும ஏழைகளாக்கியுள்ளது. அது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கியுள்ளது.இதனை ப.சிதம்பரம் இந்நிகழ்ச்சிக்கு வந்தால் அவரிடமே சொல்லலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் அவர் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை எனப் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்,மாநிலங்களவை உறுப்பினருமான டி. கே. ரங்கராஜன் MP.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.