“கல்வி உதவித்தொகை உயர்த்துக” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வருடாந்திர உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

pm modi mk stalin

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயித்துள்ளது.

இதனையடுத்து,  ரூ.2.50 இலட்சத்தில் இருந்து உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ” பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (Economically Weaker Section) வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு 8 இலட்சம் ரூபாயாக மாற்றியமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும்  முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மட்டுமின்றி, இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என்று பெருமைபடக் குறிப்பிட்டுள்ளார். (All India Survey on Higher Education) தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள  முதலமைச்சர் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மானவர்களுக்கான ஒட்டுபொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று கோட்டுக் காட்டியுள்ளார்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையாள வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினாருக்கான ஆண்டு வருமான உச்சவாப்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித் தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து. 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிளால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விலசுனத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்படிப்புக்கு முந்தைய மற்றும் பெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 6 இலட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்” பிரதமருக்கு எழுதிய அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
chess championship 2024
rain news
Keerthy Suresh Marriage
M K Stalin
WI vs ban
tea (1) (1)