சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருந்தார்கள். அப்போது அதிமுக கூட்டணி குறித்து அவர் பேசியதோடு திமுக குறித்து விமர்சனம் செய்தும் சில […]
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும். 2023-24 நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024-25 நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதனை இன்னும் சரியான கவனத்தில் அரசு எடுத்துக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியும் வருகிறார்கள். இந்த சூழலில், இன்று […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு திருத்தி அமைக்க வேண்டும். மேலும், […]
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று கூடிய சட்டப்பேரவையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை […]
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், இன்றும் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறுகிறது. அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க, […]
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றும் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல, இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த […]
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இப்போது, ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் […]
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய திமுகவினருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று (30.03.2025) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின் “பாஜக பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்கி, அதன் மூலம் நாடகங்களை நடத்தி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக நாடகமாடியது, ஆனால் அது தமிழக மக்களிடையே […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இரு மொழிகொள்கை […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ” மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை நிச்சயமாக உறுதி செய்வோம். தற்போது எங்களுடைய […]
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பட்ட பகலில் இப்படியா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்ப வைத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய மூன்று பேரும் காலில் சுடப்பட்டநிலையில் பிடிபட்டனர். கார்த்திகேயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 […]
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். இதனையடுத்து, நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற ரயில் கடத்தல் சம்பவம் முடிவுக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில், மொத்தம் 21 பயணிகள் மற்றும் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 8 செ.மீ, திருவாரூரில் 7 செ.மீ, குன்னூர் மற்றும் (நாகையில் 6 செ.மீ. என மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தர்மேந்திர பிரதான் நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.தமிழ்நாடு தொடர்ந்து NEP 2020 ஐ […]
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அமர்வின் போது எம்பி கனிமொழியுடன் நடந்த காரசாரமான விவாதத்தின் போது தர்மேந்திர பிரதான் “முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் […]
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் பேசும்போது ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் திமுக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள், […]
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி கண்டனங்களை தெரிவிக்க காரணமாகவும் அமைந்திருக்கிறது. நேற்று அவர் பேசியது ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் திமுக குறித்து பேசிய விஷயங்களும் கண்டனங்களை எழுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. அதில் பேசிய அவர் ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது […]
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பின், ராணுவ அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா பார்வையிட்டுவிட்டார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ் மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது […]
சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால், அறிஞர் அண்ணாதுரை (சி. என். அண்ணாதுரை) தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியை கைபிடித்தது. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த ஆண்டு மார்ச் 6 -ஆம் தேதி அறிஞர் அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். 1967 சட்டமன்ற தேர்தலில், திமுக 234 இடங்களில் 137 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. […]