புதுமைப்பெண் போன்ற ஏரளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் தான் ராமாமிர்தம் அம்மையார். 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாருடன் இணைந்து புரட்சியை நடத்திக்காட்டியவர் ராமாமிர்தம் அம்மையார். புதுமைப் […]
பெண்கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகர திட்டம் என திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு. சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுபோன்று, தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் […]
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் […]
கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அதிமுக ஆட்சியில் ‘தாலிக்கு தங்கம்’ திட்டமாக மாற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் […]
மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]
பிஎச்டி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகைக்கு வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு. Ph.D., பயிலும் SC, ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் முறையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில், Ph.D., பயிலும் SC, ST மாணவர்கள் வேறு எந்த வகையான உதவித்தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 55% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மாதந்தோறும் […]
பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு 60% பங்களிப்பை வழங்க வேண்டும்.கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழக அரசு ரூ. 2110 கோடி செலவாக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து 584 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். மேலும், பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதை […]