கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல்

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒவ்வோர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிர ஆலோசனையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் மேற்கொண்டு வருகிறார்.