தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 5,339 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,654 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,066 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இதுவரை நோத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,384 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,96,171 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.
நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி […]
மக்கள் பணியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். கொரோனா […]
100 வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்கே சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு .இதுவரை பணியாட்களின் ஊதியம் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் 3 மாதத்திற்கு நேரடியாக பணியாட்களின் வீடுகளுக்கு சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
திருவள்ளூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் 53 பேர் […]
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒவ்வோர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிர ஆலோசனையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கடந்த 19ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் சிக்கந்தர் பாஷா என்பவரை போலீஸ் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு போன்ற நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை முடிந்தால் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவற்று இருப்பவர்களை அழைத்து சென்று சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆதவற்ற இவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இத்தையோர்க்கு […]
மலேசியாவில் சிக்கி தவித்த 113 பயணிகளை மீட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர். மலேசியா தலைநகர் கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113 பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அங்கு சிக்கி தவித்த 113 பேரை மீட்க தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்து இறங்கிய 113 பயணிகளில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறிகுறி தெரிந்த […]
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்தனர்’ என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா சிதம்பரம் நாடு முழுவதையும், 2 -4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் […]
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாநகராட்சியின் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் என்று கூறப்படுகிறது. இனிமேல் தொற்று அறிகுறி அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளின் கதவில் உள்ளே […]
கொரோனாவை அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும். வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம் என்றும் தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு […]
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸானது சீனாவில் பரவி, அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அப்போது இந்த வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது தமிழகத்தையும் தாங்கியுள்ளது. தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சியில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது. இது குறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் […]
முதலில் சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா, தற்போது மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயால் 400-க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலும், சென்னை, காஞ்சிபுரம், கோவை ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில், 71 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக, இவர்கள் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 பேரும் வீடுகளில் […]
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த நோயானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதன் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவி வருகின்ற நிலையில், அந்தந்த நாட்டு அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் 9 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் […]