குமரி, தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி இன்று பயணம்.!

முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டங்கள் தோறும் நேரடி கள ஆய்வு செய்து வருகிறார். அதே நேரத்தில், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதன்படி, இன்று மற்றும் நாளை தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்கிடையில், இதுவரை 27 மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தியுள்ளார். இந்த நிலையில், இன்று பிற்பகல்  கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.