திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

DMK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின்

MK STAIN

DMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் பலரும் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலாக உள்ளது. குறிப்பாக திமுக வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் உட்பட 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆ.மணி, அருண் நேரு, மலையரசன், தங்க தமிழ்செல்வன், செல்வகணபதி, பிரகாஷ், ஈஸ்வரசாமி, முரசொலி, ராணி ஸ்ரீ குமார், தரணி வேந்தன், கணபதி ராஜ்குமார் ஆகியோர் புதிய வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர் பட்டியல்:

வட சென்னை – டாக்டர் கலாநீதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

ஸ்ரீபெரம்பதூர் – டி.ஆர்.பாலு

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

தருமபுரி – ஆ. மணி

திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

ஆரணி – எம்.எஸ்.தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி – மலையரசன்

சேலம் – செல்வகணபதி

ஈரோடு – பிரகாஷ்

நீலகிரி (தனி) – ஆ.ராசா

கோவை – கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

பெரம்பலூர் – அருண் நேரு

தஞ்சை – ச.முரசொலி

தேனி – தங்க தமிழ்ச்செல்வன்

தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்