ஜன.29ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

Chief Minister Edappadi Palanisamy will hold consultations with the Medical Committee on the 29th on corona prevention measures.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிப்பதா அல்லது முழுவதும் ரத்து செய்வதா என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் முதல்வர் பழனிசாமி.