சென்னை – புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கம்!
புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்திருந்தது போக்குவரத்துத்துறை.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நெற்றி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்ததால், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், மாமல்லபுரத்தில் கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.