Tag: CycloneMandous

சென்னை – புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கம்!

புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்திருந்தது போக்குவரத்துத்துறை. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நெற்றி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்ததால், சென்னையில் […]

ChennaiPuducherry 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 9 கிமீ வேகத்தில் நகர்வு என வானிலை மையம் தகவல். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழிவிலுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வேலூரில் இருந்து 40 கிமீ தொலைவில் நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 140 […]

#TNRain 2 Min Read
Default Image

புயல் பாதிப்புக்கு உதவ தயார்! – உதவி எண் அறிவித்த அண்ணாமலை!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எண்ணை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக 300க்கும் மேற்பட்ட மரங்கள், வீடுகள் உள்ளிட்ட  பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜக தொண்டர்கள் தயாராக […]

#Annamalai 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி.! பூங்காக்கள் மூடல்.. 19 விமானங்கள் ரத்து.!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 8 விமானங்கள் உட்பட 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால், முறிந்து மரங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் […]

#flights 2 Min Read
Default Image

#BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலு குறைந்து உள் மாவட்டங்களில் நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் […]

#Cyclone 3 Min Read
Default Image

#BREAKING: புயல் பாதிப்பு நிலவரம் – முதலமைச்சர் இன்று ஆலோசனை!

புயல் பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் பின்னர் சாதாரண புயலாக வலுவிழந்தது. இதன்பின் நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கி, சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: கள்ளக்குறிச்சியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#Holiday 2 Min Read
Default Image

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் – மின்வாரியம் அறிவிப்பு!

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி – 27 விமானங்கள் ரத்து!

ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யபட்டுள்ளது.  தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை […]

ChennaiAirport 2 Min Read
Default Image

#BREAKING: 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வேலூர், திருப்பூர், […]

#TNRain 2 Min Read
Default Image

#BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

#Chennai 2 Min Read
Default Image

#MandousCyclone: 100 கிமீ வேகத்தில் காற்று! மரக்காணம் முதல் பழவேற்காடு வரை கனமழை!

சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் 10 கிமீ வேகத்தில் நகர்வு. வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலில் இருந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆராச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மாண்டஸ் புயலால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]

#Chengalpattu 2 Min Read
Default Image

மாமல்லபுரத்தை நெருங்கும் “மாண்டஸ்” புயல்! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி வருகிறது. மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று முதல் நாளை அதிகாலை வரை மணிக்கு 60 – 70 கிமீ […]

#Chennai 3 Min Read
Default Image

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், நாளை […]

#Chennai 2 Min Read
Default Image

புதுச்சேரி-சென்னை அரசு பேருந்துகள் நிறுத்தம்!

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தம் என அம்மாநில அரசு அறிவிப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்காலுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

அடுத்த 3 மணிநேரத்தில் இந்தந்த இடங்களில் மழை – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுகுறைந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்த நிலையில்,  புயல் […]

#Chennai 2 Min Read
Default Image

#BREAKING: சென்னை வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம்.! காவல்துறை வலியுறுத்தல்.!

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல். சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக, மிக மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

#Chennai 1 Min Read
Default Image

#RedAlert: தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்! 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

CycloneMandous 3 Min Read
Default Image