புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்திருந்தது போக்குவரத்துத்துறை. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நெற்றி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்ததால், சென்னையில் […]
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தம் என அம்மாநில அரசு அறிவிப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்காலுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கொரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை […]