வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை கோரி வழக்கு.!

Case filed in Chennai High Court seeking examination of foreign travelers due to spread of deformed corona.

உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் ராம்குமார் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.