அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு!

Default Image

வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்!

தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வரவுள்ளதாகவும், இதில்  புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் மூத்த அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்