எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம். தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என […]
திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை. திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம். மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே சிறந்த சேவை. அனைத்து பகுதி மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குதல் மட்டுமே சிறந்த சேவையை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டில் […]
ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்தது விடியா திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம். இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் இந்த செயல் திறனற்ற விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த 19.12.2022 அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு […]
தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து அணி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது அனைத்து அணிகளின் […]
திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருத்தணியில் ரமணா, சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் […]
திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பேரூராட்சி, ஈரோடு பவானிசாகர் பேரூராட்சி அலுவலங்கள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் குளித்தலை அருகே பணிக்கப்பட்டியிலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மாண்டஸ் […]
வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்! தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வரவுள்ளதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் மூத்த அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யலாம் […]
சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சத்துணவு திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு […]
அத்திக்கடவு- அவினாசி திட்டம் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் எனவும் […]
அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் […]
திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம். கடந்த சில நாட்களாக திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலை அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் […]
திட்டங்களைக் கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 100 நாள் வேலை ஒதுக்கீடு, சாலை வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்த ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. […]
திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. திமுக மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணிச் செயலாளராக எழிலரசனும், இணை செயலாளர்களாக பூவை ஜெரால்டு, மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளராக மன்னை சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், […]
வழிபாட்டு தலம் பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் பேசியுள்ளோம் என பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். தொகுதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து மனு அளித்ததாக தகவல் கூறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மத […]
இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று பிரியா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி […]
திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, […]
சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், கவனத்துடன் கையாளுங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம். சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா மனுநீதி குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. இதை எதிர்த்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து, சில இடங்களில் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. இதன்பின், உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, `பேருந்தில் பெண்கள் […]
கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மத்திய அரசு அமைந்தாக வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் உளமார்ந்த நன்றி மடல். தலைவர் கலைஞர் இருந்திருந்தால், எப்படி ஒரு முப்பெரும் விழா நடத்தப்பட்டதோ, அதற்கு எள்ளளவும் குறையாத வகையில், விருதுநகரில் செப்15-ல் நடைபெற்ற முப்பெரும் […]