#BREAKING: நீட் தேர்வு ரத்தில் உறுதியாக உள்ளோம் – அதிமுக

Vijayabaskar opined that the AIADMK would stand by all the efforts taken by the government to cancel the NEET election.

நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று விஜயபாஸ்கர் கருத்து.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவு செப் 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றினோம்.அதன்பின்னர்,இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால்,நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார். தீர்மானத்தின் மீது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதித்து ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே மக்களாட்சியின் தத்துவம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். இந்த நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக கருத்து தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை, நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.