ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் […]
அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் […]
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார். நீட் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 2016-21-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 2021 அக்டோபர் 17-ம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல் […]
வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. அதாவது, முன்னாள் அமச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், பதில் மனுவை தாக்கல் செய்தது வருமான வரித்துறை. வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20%-ஐ […]
விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் நாளை விளக்கமளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை […]
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியீடு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக […]
திமுக அமைச்சருக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை திசை திருப்பவே நடத்தும் நாடகம் லஞ்ச ஒழிப்பு சோதனை என ஈபிஎஸ் கண்டனம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் புனைந்து, பழிவாங்கும் […]
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, காவல்துறைக்கும், வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் […]
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]
நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று விஜயபாஸ்கர் கருத்து. நீட் விலக்கு மசோதா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நீட் விலக்கு […]
விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதைய விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி […]
மக்களுக்கு பணியாற்றுவதே எனது கடமை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அப்போது பேசிய அவர், நான் உங்களிடம் கூறும் ஒரு விஷயம், என்னுடைய கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன், கொடுத்துக் கொண்டே இருப்பேன். எல்லா காலத்திலேயும் உங்களுக்கு கொடுப்பேன், […]
விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது. விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவர் கொண்டு சென்ற காரில், அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் […]
இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ‘எனக்கும் சுகர் இருக்கு, எனக்கும் பிபி இருக்கு, எனக்கும் தலைச்சுற்று வருது, எனக்கும் மயக்கமா வருது, எனக்கும் உடம்புல […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பு மெதுமெதுவாக குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால், இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் […]
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சபட்டால் அந்த தடுப்பூசி முதலில் நானே போட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை […]