#BREAKING: வரும் 28 திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்!
வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
மே 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்து.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர் , பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28-05-2022 அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
– பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/T3bDdZARIG
— DMK (@arivalayam) May 23, 2022