வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மே 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்து. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் […]
கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின்னர் இவ்விழாவில் திமுகவில் இனைந்தவர்களை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அவரது உரையில், ஆட்சியில் இருந்தாலும், […]
திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 17-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக […]
இந்தி திணிப்பை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆகவே இந்த கூட்டத்தில் இந்தி […]