#BREAKING: மருத்துவமனையில் இருந்து டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ்!

Default Image

தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  இதற்காக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிடிவி தினகரன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 4 நாட்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்