அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா, தண்டலம் தனியார் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று சிறுமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலினை […]
தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிடிவி தினகரன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு […]
சென்னை:கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடு திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு,அதன்பின்னர் லேசான இருமல் இருந்ததையடுத்து,பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22 ஆம் தேதியன்று அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக நவ.26 […]
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை […]
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை, ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை காலை முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான சோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனையின் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறுகையில், சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து […]