#BREAKING: மாணவி தற்கொலை வழக்கு – தமிழக காவல்துறை மேல்முறையீடு!

The Tamil Nadu Police has filed an appeal in the Supreme Court against the transfer of the Tanjore school student suicide case to the CBI.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை மேல்முறையீடு.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த நிலையில், அண்மையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விரவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக டிஜிபி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்க்கு இடைகால தடை விதிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.