நீட் தேர்வு : நடந்து முடிந்த நீட் தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட விவகாரம் பேசும்பொருளாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் என்பது மாபெரும் மோசடி என்று பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” நடந்து முடிந்த […]
நீட் தேர்வு : நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும், குறிப்பாக அண்மையில் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக […]
Udhayanidhi stalin: நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது, ஒரு அமைச்சர் என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சனாதன வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார், அவரின் பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் விவாதத்தை கிளப்பியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். Read More – தண்டனையை எதிர்த்து பொன்முடி […]
திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக […]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் […]
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக, நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்… அமைச்சர் […]
தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் […]
கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த நவ.2-ஆம் தேதி ஆளுநர் ஆரீப் முகமது கான் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக நேற்று நிலுவையில் இருந்த 8 மசோதாக்களில் 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஒரு மசோதாவுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில், கேரள ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எல்லை மீறுகின்ற ஆளுநர்களின் தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது. ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ரவி முன்பே இதை தெரிந்து வைத்திருக்கலாம். அல்லாது இவர் தெரிந்தும் தெரியாதது போல நடித்திருக்கலாம் என சந்தேகம் […]
டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதித்து வந்த ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. தமிழ்நாடு அரசு: அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், எந்த […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, […]
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். கிடப்பில் போட்டு விடுகிறார் என்றும், ஆளுநர் மசோதாக்களுக்கு கையெழுத்திட கால நிர்ணயம் செய்யுமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தது . இந்த மனுவானது கடந்த 6ஆம் தேதி நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (நவம்பர் […]
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து […]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]
வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் […]
மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வர் . அந்த கொலிஜியம் அமைப்பின் பரிந்துரையானது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய சட்டத்துறை அதில் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் பணி நியமனம் செய்யப்படும். சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.! இந்த நடைமுறைகள் […]
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 என இரு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி வழங்கப்டும் என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கேட்டுள்ள தேதிகளில் வேறு சில மத விழாக்கள் நடைபெற இருந்ததால் அனுமதி […]
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதாவது, சொத்து குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும், வழக்கை தானாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என […]
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில […]