டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுளளார். மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவ்வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படவில்லை. பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நாடு […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் […]
கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சஞ்சய் ராய் எனும் ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் மேற்கொண்ட விசாரணையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் குற்றவாளியாக சிபிஐ உறுதி செய்யவில்லை. அடுத்ததாக இந்த வழக்கில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் […]
கேரளா : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்திவரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற மனுத் தாக்கல் செயப்பட்டு இருக்கிறது. சினிமா துறையில் பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஹேமா கமிட்டியின் முழு […]
கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் […]
கொல்கத்தா : பயிற்சிப் பெண் மருத்துவர் படுகொலை வழக்கு மற்றும் ஆர்.ஜி கர் கல்லூரி முன்னாள் முதல்வர் தொடர்பான வழக்கு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்திற்குள் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை முதலில் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணை தேவை என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் இன்று கல்லூரி முதல்வரிடம் 7வது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. நீதிமன்ற கோரிக்கையை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். முதலில் மேற்கு வங்க போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை […]
டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை வரும் வியாழன் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை தொடங்கிய வழக்கு விசாரணையில் தலைமை […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். […]
டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கு விசாரணையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி அமலாக்கத்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஒரு தனியார் நகைக்கடைக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நகைக்கடைக்காரரின் மகனை விசாரணையில் இருந்து விடுவிக்க டெல்லி அமலாக்கத்துறை அதிகாரி முயற்சித்ததாக கூறப்படுகிறது. வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு கிடைத்த புகாரின் பெயரில் டெல்லி […]
டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. அதனை […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, […]
தூத்துக்குடி: கடந்த 2018 மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும், சம்பவம் […]
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் நேர்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் அங்கிருந்து ஒரே நேரத்தில் புறப்படுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை […]
தேசிய தேர்வு முகமை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை ஒரு புறம் சிபிஐ நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையில் முதல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மாணவர்கள் தற்போது தேசிய தேர்வு முகமையின் […]
புது டெல்லி : பீகாரில் நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்படலாம் […]
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக விஷச்சாராயம் தயாரித்து விற்றதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவானது இன்று, நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் […]