#BREAKING: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான Rank List வெளியீடு!

Default Image

முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்.

முதுநிலை மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 PG Seats இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.  தமிழ்நாட்டில் 23 அரசு கல்லூரிகள், 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள், 94 பட்டப்படிப்பு இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்