தமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு. சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும். தமிழ்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெறுவோருக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் எனவும் கூறினார்.
அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 4,092 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]
முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர். முதுநிலை மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 PG Seats இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாட்டில் 23 அரசு கல்லூரிகள், 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி […]