#BREAKING: தமிழக காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு!

Announcement of the Medal for Outstanding Service to 17 Police Officers from Tamil Nadu on the occasion of Republic Day.

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு.

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், ஐஜி பிரதீப் குமார் மற்றும் ஏஐஜி சரவணன் உள்ளிட்டோருக்கு பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.