சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று […]
தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள். நாட்டின் 73-வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட, தமிழக அலங்கார ஊர்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட தமிழக […]
ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? என்று தமிழ்தாய் பாடல் விவகாரத்தில் கனிமொழி எம்பி ட்வீட். நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி […]
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ நகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து ஏ.எஸ்.ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி மகன் மாணிக் அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டனர். குடியரசு நாளையொட்டி வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு […]
டெல்லியில் அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு. டெல்லியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக டாக்டர் பிஆர் அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடந்த […]
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருதை அறிவித்த மத்திய அரசு. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 2008 இல் […]
அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது நம் அவசரத் தேவை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 5 பக்க வாழ்த்து செய்தியானது ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும், […]
குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு. நாடு முழுவதும் நாளை 73-வது குடியரசு தினம் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியக் குடியரசு […]
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு. நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு […]
கொரோனா பரவல் காரணமாக வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு […]