டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. எதார்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறார்கள். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த […]
தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் பேச்சு. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம். அந்த வகையில், தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் அதன் மூலம் வளர்ச்சியை காண […]
பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்தார் நித்தியானந்தா. பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா சிவா பதிவிட்டுள்ளார். அதில், நித்தியானந்தா சுவாமியிடமிருந்து கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றதில் ஆசிர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கைலாச நாட்டுக்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கு […]
சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய […]
முதல்முறையாக பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. மறைந்த பிரபல திரைப்படப்பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்-24ல் நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்க்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லதா மங்கேஸ்கர் பெயரிலான விருது முதன்முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரையுலகமே புகழக் கூடிய ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இசை அமைத்ததற்காக […]
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்றி உள்ளார். அந்த வகையில், இந்த விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம். விருது பெற்றோர் விபரம் : 2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – மு. மீனாட்சி சுந்தரம் 2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – குமரி ஆனந்தன் திருவள்ளுவர் விருது – மு. […]
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு. நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு […]
தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்குவதற்கான தமிழக அரசு அரசாணை வெளியீடு. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதற்காக குடியரசு தலைவர் தமிழகத்திற்கு விருது வழங்கியுள்ளார். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில்2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் […]
இந்தாண்டு முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவ்வாறு விருதுகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்தாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக […]
எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது […]
பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்துடன், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. இந்த விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது. இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். […]
இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இவ்வாண்டிற்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. […]
தென்னிந்திய திரையுலகின் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு 2020 ஆம் ஆண்டிற்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. இந்நிலையில், இந்த வருடம் 2020 ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த […]
நடிகர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்ட ஒத்த செருப்பு திரைப்படம் புதுச்சேரி அரசால் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற உள்ளது. இயக்குனர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்டு அவராலேயே நடிக்கப்பட்ட ஒத்த செருப்பு எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், இந்த படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அடிக்கடி பார்த்திபன் கூறியுள்ளார். இருப்பினும் அதன்பின் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி அரசு சார்பில் […]
நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளை குவித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் விருது குறித்து நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் நான் விருதுக்கு ஏங்குகிறேன்; என்னுடைய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். Thanks to @IFFMelb #IFFM2020 #TogetherWithIFFM pic.twitter.com/CXpzwOvspw— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 20, […]
நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள இருவருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய […]
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிகா பத்ரா பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு […]
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். தேசிய கொடியேற்றி பின்னர் முதல்வர் சிறப்பு விருதுகளை வழங்கினார். துணிவு, சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை 3 பெண்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கினார். கொரோனா […]