#Breaking:கோடநாடு வழக்கு:"மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள்" – வாளையார் மனோஜ் மனு!

#Breaking: Kodanad case: "Sent back to jail" - Walayar Manoj Manu!

உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வாளையார் மனோஜ்,தங்க இடமும்,உணவும் கிடைக்கவில்லை எனக் கூறி தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவரான கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த நிலையில்,தற்போது தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக,உதகையில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட வாளையார் மனோஜுக்கு உயர்நீதிமன்றம் அறிவுருத்தியிருந்தது.இந்த நிலையில்,தனக்கு இங்கு வருமானம் இல்லாததால் தங்கும் வசதி மற்றும் உணவிற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி,தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புமாறு உதகை நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை,உதகை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்,இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.