மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வாளையார் மனோஜ்,தங்க இடமும்,உணவும் கிடைக்கவில்லை எனக் கூறி தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவரான கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த நிலையில்,தற்போது தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக,உதகையில் […]
உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை […]
கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் சென்றுள்ளார். அந்த நிகழ்வுக்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், […]
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலாவை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு,அதன் பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக சோலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,இது தொடர்பான வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சசிகலா,இளவரசன்,சுதாகரன் ஆகியோரையும்,நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர்,முன்னாள் எஸ்பி முரளி,கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,அதிமுக […]