#BREAKING: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் – மேலும் இருவர் கைது!

Default Image

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டது.

3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டது.  சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும், நாளை நண்பகல் 12 மணிக்கு 5 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்