கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து […]
கரூர்: 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பதிவு செய்ததாக பதியப்பட்ட புகாரின் கீழ் அவரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கரூர், குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி சான்றிதழ்கள் மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி புகார் பதியப்பட்டது. […]
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பெயரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அண்மையில், காவல்துறை வசம் இருந்து சிபிசிஐடி பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனை […]
தமிழிசை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளுநரை சந்திக்க போவதாக ஏற்கெனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு முடிந்து வெளிய வந்த முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் […]
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக விஷச்சாராயம் தயாரித்து விற்றதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவானது இன்று, நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் […]
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை […]
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அன்று, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கபட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….! இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2023 ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. […]
தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக […]
கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சிஎஸ் மாதன் தலைமையில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறையில் இருந்து 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள். 36 காவலர்களும் உதவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடநாடு […]
காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் இறந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல். சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலக காலனி காவலர்களுக்கு எதிரான வழக்கில் 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. இதில், தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், […]
தமிழ்நாடு காவல்துறை சட்டத்தில் திருத்தும் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதில், காவல்துறையில் துறை ரீதியான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க […]
கோடநாடு வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. 316 பேரிடம் பெற்ற வாக்கு மூலங்கள் அடங்கிய 3,600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றம், சிபிசிஐடி போலீசிடம் தனிப்படை போலீஸ் அளித்த 3,600 பக்க விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை […]
சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் பரங்கிமலை ரயில் நிலத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொன்ற வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதல் முறையாக சிபிசிஐடி போலீசார் அளித்த பரிந்துரையின்படி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரின் குண்டாஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் அளித்திருந்தார். பெண் எஸ்பி புகாரை அடுத்து பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை […]
சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சிபிசிஐடி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்தனத்தால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சிபிசிஐடி […]
ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த […]
கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் […]
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு அவரது பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி தகவல். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார் என்றும் சிபிசிஐடி குற்றசாட்டியுள்ளது. இதையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, மாணவி […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் […]