#BREAKING: ஜே.இ.இ தேர்வு – தமிழக மாணவர்களுக்கு தளர்வு!

Default Image

ஜே.இ.இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு.

ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை விளக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி ஆண்டு, கல்வி வாரியத்தை குறிப்பிட வேண்டிய பிரிவு நீக்கப்பட்டது. 2021-ல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வது அவசியம் என இருந்த நிலையில், தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்