#Breaking : திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு ...!

Holidays have already been announced for schools in the Thiruvannamalai district and now for colleges.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து ஆங்காங்கு உள்ள நிலவரப்படி மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.