திருவள்ளூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய காலை பெய்ய தொடங்கிய கனமழை இன்னும் பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியின் 34.05 அடியை எட்டியதால், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், ஏரிக்கு வரும் […]
கோவை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.2) மிக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல், சிறுவாணி ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டுள்ளது. Weather advisory for […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும், தென் தமிழகத்தில் குறைவாகவும், வட தமிழகத்தில் அதிகமாகவும் பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மாலாத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, (02.10.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் […]
அசாம் வெள்ளம்: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, டின்சுகியா மாவட்டத்தில் 2 இறப்புகளும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 38 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின் உபயோகமானது உச்சத்தை எட்டியது. தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகபட்சமாக 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது. அதற்க்கு முக்கிய காரணம் கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி தான். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடை மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. […]
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, மதிச்சியம் பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த […]
Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் […]
UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைபொழிவால், துபாய் நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கடந்த 24 […]
பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது. அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக […]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. மேலும், கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது. அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் […]
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா […]
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..! அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! கனமழை […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் […]
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை பாதிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான […]
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு […]
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]