நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதேபோல், காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் […]
மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]
ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நிலையில் அதி கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதி கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இடைவிடாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் மற்றும் […]
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத அதி கனமழை பெய்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நெல்லை, தூத்துக்குடி, […]
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அடுத்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer vaccine) தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய அளவிலான நோய்த்தடுப்பு இயக்கம், முதற்கட்டமாக 9 முதல் 14 வயது வரையிலான பெண்களுக்கான பள்ளிகளில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5-10 வகுப்புகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் […]
பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் […]
அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அறிவிப்பு. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் […]
பள்ளிகளில் ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை. பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்றும் பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பாலியல் தொலையில் இருந்து பள்ளி குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. […]
நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடம்கியுள்ளது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,பள்ளிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்க டெல்லி அரசு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, நிலவும் கொரோனா நிலைமைகளைப் பற்றி விவாதிக்க,பள்ளித் தலைவர் SMC/PTA உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.SMC/PTA மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா நெறிமுறைகள் குறித்து கண்காணிப்பு, […]
தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.இதன்மூலம்,37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும்,நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரிலான […]
தெலங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் தற்போது அதிக அளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்திருந்தார். இருப்பினும் கொரோனா […]
மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை, தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை […]
காற்று மாசு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக […]
டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, இன்று தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து ஆங்காங்கு உள்ள நிலவரப்படி மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், […]