கடலூர்: கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜல் புயல் எதிரொலியால், கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், பல்வேறு பள்ளி கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்னர். மேலும், தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையால் […]
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், கனமழை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நிலையில் அதி கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதி கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இடைவிடாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் மற்றும் […]
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத அதி கனமழை பெய்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நெல்லை, தூத்துக்குடி, […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..! சென்னையில் மீட்புப்பணிகள் […]
கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. கடந்த 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பல்வேறு […]
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு. ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. ராகிங்கிற்கு எதிரான […]
பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழு பாடங்களை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், முழு பாடங்களையும் நடத்த உத்ராவிடப்பட்டது. […]
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே “நான் முதல்வன் ” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் கல்லூரிகள் கேட்கிறார்கள் என தெரிவித்தார். பாலிடெக்னின் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் […]
தெலங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் தற்போது அதிக அளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்திருந்தார். இருப்பினும் கொரோனா […]
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து ஆங்காங்கு உள்ள நிலவரப்படி மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் ஏற்கனவே திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், நாகை, […]
தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், […]
கனமழை காரணமாக செங்கல்பட்டில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தொடர்ந்து செங்கல்பட்டிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]
நாளை திருவாரூர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர் மழை பெய்து வரும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை தூத்துக்குடி மற்றும் திருவாரூர் […]
தூத்துக்குடியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.