#BREAKING: டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.
இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திர சேகரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில், டிடிவி தினகரனை விசாரிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தினகரன், சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தர சுகேஷ் சந்திரசேகருக்கு ரூ.10 கோடி லஞ்சம் தந்தாக புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025