#BREAKING: ஏப்.1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அறிவிப்பு.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.