ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அறிவிப்பு. 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல். 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதில் பல்வேறு முறைகேடு நடத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், 2023ம் ஆண்டு […]
குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் […]
நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில். விடியா திமுக அரசின் திறமையின்மையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றசாட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கோடை மழையில் இருந்து பாதுகாக்க […]
நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை […]
பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசு தொகுப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]